கராச்சி: உளவு பார்த்ததாகக் கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ள இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷண் ஜாதவை இந்திய அதிகாரிகள் சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஐநா நீதிமன்றத்தின் உத்த ரவை ஏற்று பாகிஸ்தான் சட்டங்களுக்கு உட்பட்டு குல்பூஷண் ஜாதவைச் சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறது என்று பாகிஸ்தான் அரசு குறிப்பிட்டது. 2016 மார்ச் மாதம் பாகிஸ்தானில் ஜாதவ் கைது செய்யப்பட்டார்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட ராணுவ விசாரணையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்திய அரசு தொடுத்த வழக்கில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கிய 'ஹேக்' நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அனைத்துலக நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்திவைத்தது.
அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் அது உத்தரவிட்டது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், "அனைத்துலக மது ,'' ன்று வலியுறுத்தியுள்ளார்.

