தமிழக எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வை ரத்து செய்து, அதற்குப் பதிலாக எம்பிபிஎஸ் இறுதியாண்டில் ‘நெக்ஸ்ட்’ என்ற பெயரில் பொதுவான தேர்வாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

இந்த நிலையில் தங்களுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பாராளுமன்ற வளாகத்தில் நேற்று திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘நீட்’, ‘நெக்ஸ்ட்’ தேர்வுகளை கைவிடக் கோரி எம்பிக்கள் முழக்கமிட்டனர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மத்தியில் ஆளுகிறவர்கள் இந்தியைத் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்காவிட்டால் தமிழ்மொழியை மட்டுமல்ல தமிழகத்தையே விழுங்கிவிடுவார்கள். இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிப்பதற்காகவே புதிய கல்விக்கொள்கையைக் கொண்டு வருகிறார்கள் என்று தெரிவித்துள்ளார் புதுவை முதல்வர் நாராயணசாமி.

25 Aug 2019

புதுவை முதல்வர்: விழித்திராவிடில் தமிழ்மொழியை விழுங்கிவிடுவர்