புதுடெல்லி: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக டி. ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த இவர், பலமுறை அக்கட்சி சார்பாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றவர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலராக கடந்த 2012ஆம் ஆண்டு சுதாகர் ரெட்டி பொறுப்பேற்றார். அதன் பின்னர் 3 முறை அப்பதவிக்கு அவர் தேர்வானார்.
இந்நிலையில் அண்மையில் அக்கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், 70 வயதான டி. ராஜா பொதுச்செயலராக தேர்வானதாகவும் தெரிகிறது.

