தனி நபர் மின் கட்டணம் ரூ.1.28 கோடி

தனி நபர் மின் கட்டணம் ரூ.1.28 கோடி

1 mins read

லக்னோ: 1.28 கோடி ரூபாய்க்கு மின் கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்த அறிவிப்பைக் கண்டு தாம் மிரண்டு போனதாகச் சொல்கிறார் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஷமீம். ஹாப்பூர் நகரில் உள்ள ஷாம்ரி கிராமத்தில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவர்.

இந்நிலையில் அண்மையில் இவருக்கு வந்த மின்சாரக் கட்டணத்துக்கான பில் கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. மொத்தம் ரூ.1.28 கோடி மின்கட்டணம் செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் கட்டணம் செலுத்தாததால் அவரது வீட்டுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சராசரியாக மாதம்தோறும் அதிகபட்சம் 800 ரூபாய் மட்டுமே மின் கட்டணம் செலுத்துவாராம் ஷமீம்.