வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2

நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்வதற்காக ரூ.978 கோடி செலவில் (S$197.2 மில்லியன்) உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது.

இந்திய நேரப்படி பிற்பகல் 2.43 மணிக்கு அந்த விண்கலத்தைச் சுமந்தபடி ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து கிளம்பியது. ஏவப்பட்ட 16ஆம் நிமிடத்தில் அது புவியின் சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. 48வது நாளில், அதாவது செப்டம்பர் 6 அல்லது 7ஆம் தேதியன்று அவ்விண்கலம் நிலவைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதிலிருந்து விக்ரம், பிரக்யான் என்ற இரு விண்கலங்கள் பிரிந்து, நிலவில் 14 நாட்கள் ஆய்வில் ஈடுபட்டு இந்திய விண்வெளி ஆய்வு மையத்திற்கு (இஸ்ரோ) தகவல்களை அனுப்பும். அதே வேளையில், சந்திரயான்-2 விண்கலம் ஓராண்டு காலத்திற்கு நிலவைச் சுற்றிச் சுற்றி வந்து ஆய்வு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இம்மாதம் 14ஆம் தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் அம்முயற்சி கைவிடப்பட்டது. இஸ்ரோவால் 2008 அக்டோபரில் ஏவப்பட்ட சந்திரயான்-1 விண்கலம் 2009 ஆகஸ்ட் மாதம் வரை செயல்பாட்டில் இருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!