வேன் - லாரி மோதல்; 9 பேர் பலி

வேன் - லாரி மோதல்; 9 பேர் பலி

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தின் தவ்லானா பகுதியில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு 27 பேர் வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். புலந்த்ஷாஹர் மாவட்டத்தின் ஹபீஸ்பூர் பகுதியை வேன் கடந்தபோது சாலையின் ஏதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் வேனில் பயணம் செய்த 9 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயமடைந்தனர். லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார்.