மின்னல் தாக்கி 32 பேர் பலி

மின்னல் தாக்கி 32 பேர் பலி

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. அத்துடன் இடி, மின்னல் தாக்கியதில் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 32 பேர் மரணம் அடைந்தனர்.

கான்பூர், பதேக்பூர் ஆகிய பகுதிகளில் 14 பேரும் ஜான்சியில் 5 பேரும் ஜலாவுன் பகுதியில் 4 பேரும் ஹமீர்பூர் பகுதியில் 3 பேரும், காசிப்பூர் பகுதியில் இருவரும், ஜாவுன்பூர், கான்பூர் தேகாத், சித்ராகோட், பிரதாப்கவுர் ஆகிய பகுதிகளில் 4 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.