தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாவில் வாகை சூடிய பாஜக

1 mins read
133f5884-8bf1-4a1c-b605-f418cc55e0a4
-

பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையைப் பெற்று வென்ற பாரதிய ஜனதாக் கட்சி, கர்நாடகாவின் மாநில சட்டமன்றத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. செவ்வாய்க்கிழமை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற கூட்டணியை பாரதிய ஜனதா ஆறு வாக்கு வித்தியாசத்தில் வென்றது.

பாஜக அரசு அமைந்துள்ள ஒரே தென்னிந்திய மாநிலம் கர்நாடகா.

"கர்நாடகாவின் மக்கள் எங்கள் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். நேர்மையான, தொலைநோக்கு பார்வை கொண்ட நிர்வாகத்தை நாங்கள் வழங்குவோம்," என்று பாஜக மாநில அமைச்சர் ஜெ. சி மதுசுவாமி தெரிவித்தார்.

மாநில முதலமைச்சர் குமாரசாமி வேறு வழியின்றி பதவி விலகவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் தமது பதவி விலகல் கடிதத்தை மாநில ஆளுநர் வஜ்ஜுபாய் வலாவிடம் கொடுத்தார்.

இந்தியாவின் வடக்கு, மேற்குப் பகுதிகளைத் தாண்டி தனக்கான ஆதரவை விரிவுபடுத்த பாஜக முயன்று வருகிறது. மாநிலக் கட்சிகளே மேலோங்கும் தென்னிந்தியாவிற்குள் கால்பதிக்க கர்நாடகாவை ஒரு முக்கிய படிக்கல்லாக பாஜக கருதுகிறது.