ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் ஃபைரோசாபாத் நகரில் ஆனந்த் நகர் என்ற பகுதியில் மாநகராட்சி நிர்வாகம் வழங்கிய தண்ணீரைக் குடித்த இரண்டு சிறார்கள் மாண்டுவிட்டனர்.
அந்த மூன்று மற்றும் ஐந்து வயது சிறார்கள் இருவரும் சகோதர சகோதரிகள். கெட்டுப்போன தண்ணீரைக் குடித்த இதர 27 சிறார்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
மரண சம்பவம் நிகழ்ந்ததை அடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கெட்டுப்போன தண்ணீர்க் குழாய்களே மரணத்துக்குக் காரணம் என்று தெரிகிறது.

