வெள்ளத்தால் குறைந்த வெங்காய விளைச்சல்

பங்ளாதேஷில் வெங்காய விலைகள் கடந்த இரண்டு வாரங்களில் இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இந்தியத் துணைக்கண்டத்தின் கிழக்குப் பகுதியை உலுக்கியெடுத்த அண்மை வெள்ளத்தால் அங்குள்ள வெங்காயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய ஏற்றுமதிகளும் இதனால் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி ஆசியாவின் பல்வேறு கலாசாரங்களில் வெங்காயம் முக்கிய சமையல் பொருளாக உள்ளது. பங்ளாதேஷில் சராசரி வெங்காய விலை 50 டாக்காவாக (81 சிங்கப்பூர் காசுகள்) அதிகரித்துள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள எய்து- உல்- அதா இஸ்லாமிய சமய விழாவின்போது வெங்காய விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த பங்ளாதேஷ் இந்திய ஏற்றுமதிகளை நாட வேண்டியுள்ளது.

இந்தத் திடீர் ஏற்றம் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது.

இந்தியாவிலுமே வெங்காயத்திற்கான தட்டுப்பாடு நிலவுகிறது. அங்கும் பருவமழை வெள்ளத்தால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. வேறு சில பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருப்பதாலும் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக மும்பையிலுள்ள வெங்காய ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் ஷா தெரிவித்திருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!