பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ள மகாதேவா என்ற கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை விண்ணில் இருந்து விழுந்ததாகக் கூறப்படும் சுமார் 15 கிலோ எடை கொண்ட கல் இப்போது பாட்னாவில் உள்ளது. இதை பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பார்வையிட்டார். இந்தக் கல் பூமியில் விழுந்தபோது பூமிக்குள் நான்கு அடி ஆழத்துக்குப் பள்ளம் ஏற்பட்டதாக நேரே பார்த்த விவசாயிகள் தெரிவித்தனர். இந்தக் கல்லை ஆராயும்படி வல்லுநர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்
பீகாரில் விழுந்த விண்கல் குறித்து ஆராய உத்தரவு
1 mins read

