புதுடெல்லி: இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ தொடங்கப்பட்டபோது, 2016ஆம் ஆண்டில் இடைஇணைப்புகளை வழங்கத் தவறியதற்காக பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா நிறுவனங்களுக்கு 3,050 கோடி ரூபாய் அபராதம் விதிக்க மின்னிலக்கத் தொலைத்தொடர்பு ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இம்முடிவு, தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஒப்புதலுக்கு அனுப்பப்படும்.
இதனிடையே, இந்த முடிவு மிகுந்த ஏமாற்றத்தை அளிப்பதாகவும் ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள தொலைத்தொடர்புத் துறைக்கு இது மேலும் சுமையாக அமையும் என்றும் சட்டரீதியான மேல் நடவடிக்கைகளை தாங்கள் பரிசீலிக்கப்போவதாகவும் இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.

