புலியை அடித்தே கொன்றனர்

புலியை அடித்தே கொன்றனர்

1 mins read
0deef719-3214-4eb6-8f2b-a54fcf31c969
படம்:ஏஎஃப்பி -

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண் புலியை அடித்தே கொன்றதாக கிராமத்தினர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடக்கிறது. அந்த மாநில தலைநகர் லக்னோவில் இருந்து 240 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பிலிபிட்பு என்ற புலிகள் காப்பகத்தில் இருந்த 6 வயதான பெண் புலி அருகே உள்ள மடைனா என்ற கிராமத்திற்குள் புகுந்து ஒன்பது பேரைத் தாக்கியது. இதனால் பயந்துபோய் கோபம் அடைந்த அந்தக் கிராமத்தினர், அந்தப் புலியை பெரிய கம்புகளால் தாக்கிக் கொன்றனர். இதைக் காட்டும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது.

தகவல் அறிந்து அந்தப் பகுதிக்கு வனத்துறையினர் சென்றபோது, படுகாயம் அடைந்த புலியை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல மக்கள் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அந்த புலி அங்கேயே மரணமடைந்தது.

கிராமத்தினர் 31 பேர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.