அகமதாபாத்: தண்ணீர் திருடினால் இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கும் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது குஜராத் அரசு. இச்சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. தண்ணீர் திருட்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிய சட்டத்திருத்த மசோதா ஒன்றை குஜராத் எரிசக்தி துறை அமைச்சர் சவ்ரவ் பட்டேல் தாக்கல் செய்தார்.
விவசாயத்துக்கான தண்ணீரை அதற்கான வடிகாலை உடைத்துத் திருடினால் இரண்டாண்டு சிறைத்தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல் குடிநீர் விநியோக பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவையும் அவர் தாக்கல் செய்தார்.
"இதற்கு முன்பு இக்குற்றத்திற்காக அதிகபட்சம் 6 மாதங்கள் வரை மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டது. இனி குடிநீர் குழாயை உடைத்துத் தண்ணீர் திருடினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது," என அமைச்சர் சவ்ரவ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இந்த 2 மசோதாக்களும் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. எனினும் இரு மசோதாக்களும் விவசாயிகள், பொதுமக்களுக்கு எதிரானது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
"தண்ணீரைப் பாதுகாக்கவே இச்சட்டங்கள் கொண்டு வரப்படு கின்றன. இது விவசாயிகளை எந்த வகையிலும் நிச்சயமாகப் பாதிக்காது.
"எதிர்க்கட்சிகள் தேவையின்றி சில குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன," என அமைச்-சர் சவ்-ரவ் பட்-டேல் தெரி-வித்-துள்-ளார்.

