ஒரு கோடி மரங்கள் வெட்ட மத்திய அரசு அனுமதி; காங்கிரஸ் கட்சி கண்டனம்

ஒரு கோடி மரங்கள் வெட்ட மத்திய அரசு அனுமதி; காங்கிரஸ் கட்சி கண்டனம்

1 mins read

புதுடெல்லி: ஒரு கோடி மரங்கள் வெட்ட மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 1.09 கோடி மரங்கள் வெட்டுவதற்கு கடந்த 5 ஆண்டுகளில் அனுமதி அளிக்கப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் தெரிவித்த தகவல் அதிர்ச்சி அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

"பாஜக நமது எதிர்காலத்தை அழிக்கிறதா?" என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

"மரங்கள்தான் வாழ்க்கை, மரங்கள்தான் பிராணவாயு," என்றும் ரந்தீப் சுர்ஜேவாலா சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.