ஏழு நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றது சிறப்பு போலிஸ்

ஏழு நக்சலைட்டுகளை சுட்டுக் கொன்றது சிறப்பு போலிஸ்

1 mins read

ராய்ப்பூர்: சிறப்புப் படை போலிசார் மேற்கொண்ட அதிரடித் தாக்குதல் நடவடிக்கையின் போது மூன்று பெண்கள் உள்பட 7 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் சத்தீஷ்கர் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் பாஸ்டர் மாவட்டம் திரியா வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலையடுத்து அம்மாநிலத்தின் நக்சல் ஒழிப்புப் படை பிரிவின் அதிகாரி சுந்தர்ராஜ் காவலர்களுடன் அங்கு விரைந்தார்.

இதையடுத்து நடந்த தீவிர வேட்டையின் முடிவில் நக்சலைட்டுகள் இருப்பிடம் தெரியவந்தது.

அப்பகுதியைச் சுற்றி வளைத்த போலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தி னர். இதில் 3 பெண்கள் உட்பட 7 நக்சலைட்டுகள் பலியாகினர்.