பீகார், அசாம் மாநிலங்களில் பெய்யும் கனமழையால் ஒரு கோடி பேர் பாதிப்பு

பீகார், அசாம் மாநிலங்களில் பெய்யும் கனமழையால் ஒரு கோடி பேர் பாதிப்பு

1 mins read

பாட்னா: இடைவிடாமல் பெய்துவரும் கனமழை காரணமாக பீகார், அசாம் மாநிலங்களில் சுமார் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் மழைக்குப் பலியாகிவிட்டனர். அசாமில் 17 மாவட்டங்களில் மழை பாதிப்பு கடுமையாக உள்ளது. அங்கு மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீகாரில் அபாய அளவைக் கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளதால், 12 மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. 80 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.