நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவுக்கு வெற்றி

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பாவுக்கு வெற்றி

1 mins read
39a3cafb-941d-439d-b333-b67bc49fcd6f
-

மன்னிப்போம், மறப்போம் என்ற கொள்கையின்மீதான நம்பிக்கையால் பழிவாங்கும் அரசியலில் தாம் ஈடுபடபோவதில்லை என்று கர்நாடகாவின் பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்திருக்கிறார். கர்நாடகாவின் சட்டமன்றத்தில் இன்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து அவர் அவ்வாறு கூறினார்.

கர்நாடகாவின் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கத்தால் பாஜகவின் சாதக நிலை மேலும் அதிகரித்துள்ளது. காங்கிரஸ்-மஜத கூட்டணியிலிருந்து விலகிய சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதிநீக்கத்தை பாஜக எதிர்த்தபோதும், இதுவும் நல்லதுதான் என்றும் எண்ணுகின்றனர்.

தகுதிநீக்கத்திற்குப் பிறகு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 208 என்றும் 105 இடங்களைக் கொண்டுள்ள பாஜக அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது என்றும் மூத்த பாஜக உறுப்பினரான ஆர்.அசோகன் நேற்று தெரிவித்தார்.

பாஜக உறுப்பினர்கள் இன்று கூட்டம் ஒன்றில் சந்திக்கவுள்ளனர். புதிய நிர்வாகத்திற்கான தங்களது யோசனைகளை முன்வைக்குமாறு கர்நாடகாவின் பாஜக தலைவர் எடியூரப்பா பாஜக சட்டமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரை இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை.