பசுமாடுகளுக்கான பராமரிப்பு இடங்களைச் சுற்றுப்பயணத் தளங்களாக மாற்ற இந்திய அரசாங்கம் முற்படுகிறது.
இதுபோன்ற 5,000 பராமரிப்பு இடங்கள் இந்தியாவில் உள்ளன. எவருக்கும் சொந்தமில்லாத மாடுகளின் எண்ணிக்கை இந்தியாவில் இப்போது ஐந்து மில்லியனாக அதிகரித்துள்ளது. இந்து சமயத்தில் பசுக்களின் புனிதத்தன்மைக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் இவற்றின் பெருக்கத்திற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. பால் சுரக்க முடியாத வயதான பசுக்கள், மலட்டுப் பசுக்கள், காளை மாடுகள் ஆகியவற்றை விவசாயிகள் பலர் கைவிடுவதால் இவை நிராதரவாகச் சுற்றித் திரிகின்றன.
சுற்றுப்பயணத்திற்காக மட்டுமின்றி, மாட்டுச் சாணம், மூத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்தி மருந்து பொருட்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களும் நடப்பில் உள்ளன.
ஆயினும், பராமரிப்பு இடங்களுக்கான நிதியாதரவு இன்னும் நலிவாக உள்ளதால் இத்தகைய இடங்கள் பல செயலிழந்து வருகின்றன. எனவே சுற்றுப்பயணிகளின் வருகை, பசுக்கள் தொடர்ந்து வாழ்வதற்கான நிதியாதரவை வழங்கும் என்பது பராமரிப்பு இடங்களை நடத்துவோரின் நம்பிக்கை.

