புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் இணைந்து தேர்வு செய்யக் கூடாது எனவும் அக்கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சசி தரூர் தெரிவித்துள்ளார். அவரது கருத்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
காங்கிரசுக்கு புது ரத்தம் பாய்ச்சப்பட வேண்டும் என்பதால் இளையர் ஒருவரைத் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சசிதரூர் வலியுறுத்தி உள்ளார்.
"எனது கருத்தை பலரும் ஆதரிக்கின்றனர். மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நடக்கும் ஆலோசனைகளின் போது இத்தகைய கருத்து தெரிவிக்கப்படுகிறது.
"பூனைக்கு யாராவது மணி கட்ட வேண்டும். கட்சிக்கு சரியான தலைமை இல்லாததே கர்நாடகா வில் ஆட்சி மாற காரணம்," என்று சசிதரூர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கிடையே, காங்கிரஸ் தேசியத் தலைவர் பதவிக்கு பிரியங்கா காந்திதான் பொருத்தமான தேர்வாக இருப்பார் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

