புதுடெல்லி: இஸ்ரேலில் எதிர்வரும் செப்டம்பர் 17ஆம் தேதியன்று பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பிரசாரத்துக்காக இந்தியப் பிரதமர் மோடியின் படம் பயன்படுத்தப்பட்டது உலக கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்ரேலின் நடப்பு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவுடன், மோடி கைகுலுக்கும் சுவரொட்டிகள் டெல் அவிவ் நகரை ஆக்கிரமித்துள்ளன.
பல நாட்டுத் தலைவர்களுடன் நெட்டன்யாகு கைகுலுக்கும் சுவரொட்டிகள் காணப்பட்டாலும், நெட்டன்யாகுவின் லிகுட் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள 15 மாடிக் கட்டடத்தில் 10 மாடி உயரத்துக்கு அவர் மோடியுடன் உள்ள மிகப்பெரிய சுரொட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி, இஸ்ரேல் சென்றபோது நெட்டன்யாகுவை சந்தித்த காணொளி தொகுப்பும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே தேர்தலுக்கு முன்பாக செப்டம்பர் 9ஆம் தேதியன்று இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெட்டன்யாகு.

