புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் தயாராகும் ரசகுல்லாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அளித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விண்ணப்பித்திருந்தது. இதே கோரிக்கையை மேற்கு வங்க அரசும் அச்சமயம் மத்திய அரசிடம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் பல்வேறு ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்த மத்திய அரசு, ஒடிஷா மாநில கோரிக்கையை ஏற்றுக் கொண்டது.
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தனித்துவமாக தயாரிக்கப்படும் பொருளுக்கோ அல்லது தனித்துவமாக விளையும் பொருளுக்கோ மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி வருகிறது. குறிப்பிட்ட உற்பத்திப் பொருள் முறையாக பாரம்பரிய ரீதியில் தயாரிக்கப்பட்டதற்கும் தரத்தைக் காப்பதற்குமான சான்றாகவும் இது உள்ளது.

