மெய்நிகர் நீதிமன்றத்துக்கு வரவேற்பு

மெய்நிகர் நீதிமன்றத்துக்கு வரவேற்பு

1 mins read

புதுடெல்லி: போக்குவரத்து விதிகளை மீறி சிக்கிக் கொள்வோர் தங்கள் வீட்டிலிருந்தபடியே அபராதம் செலுத்தி தங்கள் மீதான வழக்கை முடித்துக் கொள்ளும் வகையில் மெய்நிகர் நீதிமன்றம் (virtual court) டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இனி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு மின்னஞ்சல், கைபேசி வழி சம்மன் அனுப்பப்படும். அதில் மெய்நிகர் நீதிமன்றத்திற்கான இணைப்பும் இருக்கும்.

விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் மோட்டார் வாகன சட்ட விதிகளின்படி அபராதத் தொகை செலுத்தலாம் அல்லது வழக்கை நடத்தலாம். போலிசாரையும், நீதிமன்றத்தையும் நேரில் பார்க்காமலேயே அபராதம் செலுத்தி வழக்கை முடித்துக் கொள்ளும் இந்த வசதிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.