உன்னாவ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

உன்னாவ் விவகாரம்: பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் போராட்டம்

1 mins read

லக்னோ: பாலியல் தாக்குதலுக்கு ஆளான உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடும் நிலையில், அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளதாக உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதையடுத்து இளம் பெண் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக பிரமுகரால் தாம் பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் புகார் எழுப்பியுள்ளார். இந்நிலையில் அவர் சென்ற கார் மீது லாரி மோதியதில் அவரது உறவினர்கள் இருவர் பலியாகினர். இளம் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி அமளியிலும் ஈடுபட்டனர்.