உன்னாவ் விபத்து: 10 பேர் மீது வழக்கு

உன்னாவ் விபத்து: 10 பேர் மீது வழக்கு

1 mins read

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் உன்னாவ் நகரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ நேற்று வழக்குப்பதிவு செய்தது.

உத்தரப்பிரதேசம் பங்கர்மாவு சட்டமன்றத் தொகுதி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார், கடந்த 2017 ஆம் ஆண்டு தனது வீட்டில் அந்த இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.