அரியானா காங்கிரஸ் தலைவருக்கு ரூ.200 கோடி வெளிநாட்டுச் சொத்து

அரியானா காங்கிரஸ் தலைவருக்கு ரூ.200 கோடி வெளிநாட்டுச் சொத்து

1 mins read

புதுடெல்லி: அரியானா காங்கிரஸ் தலைவர் குல்தீப் பிஷோனி மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனையில் பிஷோனிக்கு ரூ.200 கோடி வெளிநாட்டுச் சொத்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் மகன் குல்தீப் பிஷோனி. அரியானாவின் ஆதம்பூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அரியானா, டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் குல்தீப் பிஷோனி மற்றும் அவரது குடும்பத்தினரின் இடங்களில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.