இஸ்லாமிய ஊழியர் எடுத்து வந்த உணவை பெற மறுத்தவருக்கு பதிலடி

இஸ்லாமிய ஊழியர் எடுத்து வந்த உணவை பெற மறுத்தவருக்கு பதிலடி

1 mins read

புதுடெல்லி: கைபேசி செயலி மூலம் 'ஆர்டர்' செய்த உணவை எடுத்து வருவது இஸ்லாமிய ஊழியர் என்பதை அறிந்து, உணவை பெற மறுத்துள்ளார் டெல்லியைச் சேர்ந்த அமித் சுக்லா. நேற்று முன்தினம் இஸ்லாமிய ஊழியருக்குப் பதிலாக வேறொருவரை உணவுடன் அனுப்புமாறு அவர் விடுத்த கோரிக்கையை உணவு விநியோகிக்கும் தனியார் நிறுவனம் ஏற்க மறுத்தது. 'இது இந்துக்களுக்குப் புனிதமான மாதம். எனவே, உணவு எடுத்து வரும் முஸ்லிம் ஊழியருக்கு பதில், வேறொரு ஊழியரை அனுப்புங்கள்' என கோரிக்கை விடுத்த அமித் சுக்லா, அந்நிறுவனத்தை சமூக வலைத்தளத்தில் குறைகூறினார். அதற்கு 'உணவுக்கு மதமில்லை' என அந்நிறுவனம் பதிலடி கொடுத்தது.