உலகப் பொருளியல் தரவரிசை- இறங்கியது இந்தியா

உலகப் பொருளியல் தரவரிசை- இறங்கியது இந்தியா

1 mins read
e6fdf1f9-2759-4b89-a8f7-e84e6e65ce8f
-

உலகப்பொருளியல்களைத் தரவரிசைப்படுத்தும் பட்டியல் ஒன்றில் இந்தியா கடந்தாண்டு ஏழாவது இடத்திற்கு இறங்கியுள்ளதாகப் பட்டியலை வெளியிட்ட உலக வங்கி தெரிவித்துள்ளது.

2017 ம் ஆண்டு இந்தியா இந்த பட்டியலில் ஆறாவது இடத்தை வகித்திருந்தது.

ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் உலக நாடுகளைத் தரவரிசைப்படுத்தும் பட்டியலை உலக வங்கி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 2017 ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி உற்பத்தி 2.65 ட்ரில்லியன் டாலர்களாக இருந்தது. இது கடந்தாண்டில் 2.73 ட்ரில்லியன் டாலர் ஆக இருந்தது. இருந்தபோதும் பிரிட்டனையும் ( 2.82 ட்ரில்லியன்) பிரான்சையும் (2.77 ட்ரில்லியன்) இந்தியா முந்திக்கொள்ள முடியவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய நாணயத்தின் மதிப்பு குறைந்ததே இதற்குக் காரணம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.