7வது இடம்: பொருளியலில் பின்தங்கியது இந்தியா

7வது இடம்: பொருளியலில் பின்தங்கியது இந்தியா

2 mins read

புதுடெல்லி: கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசைப்படி உலக அளவில் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு 6வது இடத்தில் இருந்து 7வது இடத்திற்கு சரிந்துள்ளதாக உலகவங்கி தெரிவித்துள்ளது. 2017ஆம் ஆண்டு பிரான்சை பின்னுக்குத் தள்ளி 6வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியது.

அதனை கருத்தில் கொண்டு, அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் என்ற பொருளாதார இலக்கை எட்டுவதற்கு பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, உலக அளவில் தொடர்ந்து 20 லட்சத்து 50 ஆயிரம் கோடி டாலர் பொருளாதார மதிப்புடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 லட்சத்து 60 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் சீனா இரண்டாவது இடத்திலும் 5 லட்சம் கோடி டாலர் மதிப்புடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. 2 லட்சத்து 80 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் 5வது மற்றும் 6வது இடத்தைப் பிடித்துள்ளன.

2017ஆம் ஆண்டில் 2 லட்சத்து 65 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் 6வது இடத்தில் இருந்த இந்தியா, 2018 ஆம் ஆண்டில் 2 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர் மதிப்புடன் 7வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளதாக உலகவங்கி தெரிவித்துள்ளது. நாணய மதிப்பில் ஏற்ற இறக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் மந்த நிலை காரணமாக 7வது இடத்திற்கு இந்திய பொருளாதாரம் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கிரீசில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 2019-2020ஆம் நிதியாண்டில் 6.9 விழுக்காடாகக் குறைத்துள்ளது.

கடன் மதிப்பீட்டு நிறுவனமான இது பலவீனமான பருவமழையை கணக்கில் எடுத்துக்கொண்டது என்றும் இதனால் நடப்பு ஆண்டின் முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை குறைத்தது என்றும் கூறியுள்ளது. அனைத்துலக அளவிலேயே மெதுவான வளர்ச்சிதான் காணப்படுகிறது என்றும் அது கூறியுள்ளது.