தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திரைப்படத்தில் சன்னி லியோன் தெரிவித்த கைபேசி எண்ணால் அவஸ்தை: போலிசை நாடிய டெல்லி ஆடவர்

1 mins read

மும்பை: 'அர்ஜுன் பாட்டியாலா' என்னும் திரைப்படம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியானது. தில்ஜித், கிரித்தி சனோன், வருண் சர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடிகை சன்னி லியோனும் நடித்துள்ளார்.

படத்தின் ஒரு காட்சியில் சன்னி லியோன் ஒரு கைபேசி எண்ணைக் கூறுவார். இந்த எண் சன்னி லியோனுடையது என்று தவறாகப் புரிந்துகொண்ட ரசிகர்கள் தொடர்ந்து அழைப்பு செய்துள்ளனனர். சுமார் 400க்கும் அதிகமான கைபேசி அழைப்புகள் தொடர்ச்சியாக வந்ததால் அந்த எண்ணுக்குச் சொந்தக்காரரான புனித் அகர்வால் என்பவர் எரிச்சல் அடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது சன்னி லியோன் எண் இல்லை என்று சொல்லி சொல்லி அவர் நொந்துபோயிருக்கிறார். புகார் செய்த பின்னரும் ஏராளமான அழைப்புகள் வருவதால் நீதிமன்றத்தை நாட அவர் முடிவு செய்துள்ளார்.

தமது திரைப்படக் காட்சியால் தொல்லை நேர்ந்ததற்காக டெல்லிவாசியான புனித்திடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் சன்னி லியோன்.

திரைப்படங்களில் பிரபல நடிகர், நடிகைகள் யாருக்காவது கைபேசி எண்ணை சொல்வதுபோல் காட்சி வந்தால் உபயோகத்தில் இல்லாத எண்ணைச் சொல்வது வழக்கம். ஆனால் இந்தப் படத்தில் புழக்கத்தில் இருக்கும் எண் பயன்படுத்தப்பட்டது சிக்கலாகி இருக்கிறது.