புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் மீது பாலியல் பலாத்கார புகார் செய்தார். இது தொடர்பாக எம்எல்ஏ கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் சிறுமி தமது வழக்கறிஞர் மற்றும் உறவினர்களுடன் காரில் சென்றபோது லாரி மோதியது. இதில் உறவுக்காரப் பெண்கள் இருவர் உயிரிழந்தனர். சிறுமியும் வழக்கறிஞரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். சிறுமியை கொல்ல சதி நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது பாதிக்கப்பட்ட உன்னாவ் சிறுமியின் புகைப்படம், பெயர் மற்றும் எந்த அடையாளத்தையும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வெளியிடக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பாலியல் விவகாரம்: சிறுமியின் அடையாளத்தை வெளியிடத் தடை
1 mins read

