பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் நிபந்தனை

பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் நிபந்தனை

1 mins read
bf0a6b91-01be-4164-b2e9-b608638af4a5
இந்திய ராணுவத்தினர். கோப்புப்படம் -

ஸ்ரீநகர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் நிலவும் நிலையில், சுட்டுக் கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் வெள்ளைக் கொடியுடன் வர வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் கட்டுப்பாடு விதித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது.

எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது வழக்கமான நிகழ்வாகிவிட்டது. தங்களிடம் பிடிபடும் இந்திய வீரர்களின் உடல் உறுப்புகளைத் துண்டித்து, கடும் சித்திரவதைக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவம் கொடூரமாகக் கொல்வதாக இந்தியா பலமுறை குற்றம்சாட்டி உள்ளது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் கெரான் எல்லைப் பகுதி வழியே ஊடுருவ முயன்ற 5 பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஐந்து பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது.

"அமர்நாத் யாத்திரையைச் சீர்குலைக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதை அடுத்து காஷ்மீரில் உள்ள பக்தர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், எல்லையில் ஊடுருவல் முயற்சி நடந்துள்ளது.

இந்நிலையில் இறந்த வீரர்களின் உடலை மீட்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் தரப்பு வெள்ளைக் கொடியுடன் வர வேண்டும் என்று இந்திய ராணுவம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

இதற்கிடையே கெரான் எல்லைப் பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.