அரசியல் வேண்டாம்; நிம்மதியே தேவை என்கிறார் குமாரசாமி

அரசியல் வேண்டாம்; நிம்மதியே தேவை என்கிறார் குமாரசாமி

1 mins read

பெங்களூரு: அரசியல் களத்தில் யாரையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலில் நீடிக்க தாம் விரும்பவில்லை என்றார். மக்கள் மனதில் இடம் கிடைத்தால் அதுவே போதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"மாநில வளர்ச்சிக்காக 14 மாதங்கள் நன்றாக வேலை செய்தேன். அந்த வகையில் திருப்தியாக உணர்கிறேன்.

"இப்போதைய அரசியலை நான் உற்று கவனித்து வருகிறேன். நல்லவர்களுக்கு சாதி அரசியல் தேவையில்லை. இனியும் அரசியலில் தொடர விரும்பவில்லை. என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்," என்றார் குமாரசாமி.

தாம் எதிர்பாராதவிதமாக அரசியலுக்கு வந்ததாகக் குறிப்பிட்ட அவர், தாம் முதல்வர் ஆனதும் எதிர்பாராத நிகழ்வுதான் என்றார்.

குமாரசாமியின் திடீர் அறிவிப் பால் பரபரப்பு நிலவுகிறது.