காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீட்பு

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து மீட்பு

1 mins read
4fdf7fcd-a047-45db-ad4e-b116be7d9982
-

இந்திய அரசாங்கம் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டுக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரே இந்திய மாநிலமான காஷ்மீரை நாட்டுடன் முழுமையாக ஒருங்கிணைக்கும் முயற்சியாக இது உள்ளது என்று இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவும் பாகிஸ்தானும் உரிமை கொண்டாடும் காஷ்மீர், தனக்கான சொந்தச் சட்டங்களை அமைக்க வகைசெய்யும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்திய நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

"இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் முழுவதும் இனி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் செயல்படுத்தப்படும்," என்று திரு ஷா கூறினார்.

அரசாங்கத்தின் இந்த மாற்றங்களுக்கு இந்திய அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாற்றங்களைத் தொடர்ந்து காஷ்மீரின் போலிஸ் அதிகாரிகள் வன்முறைச் சம்பவங்களுக்காக ஆயத்தமாக உள்ளனர்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்துகளை வாங்குவதை சட்டப்பிரிவு 370 தடை செய்திருந்தது. அத்துடன் காஷ்மீரின் அரசாங்க வேலைகள், கல்லூரி இடங்கள் ஆகியவை சொந்த மக்களுக்காக ஒதுக்கப்படுவதையும் அந்தச் சட்டம் உறுதி செய்திருந்தது. இந்தியாவின் இந்த முடிவை வன்மையாகக் கண்டிப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இந்தியாவின் செயல் அனைத்துலகச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் இதனை எதிர்கொள்ள தனது நாடு ஆன அனைத்தையும் செய்ய முற்படும் என்றும் பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.