கால், அரை நூற்றாண்டுகளாக ஏராள வழக்குகள் நிலுவையில்

கால், அரை நூற்றாண்டுகளாக ஏராள வழக்குகள் நிலுவையில்

1 mins read

கௌஹாத்தி: இந்தியாவில் 1,000க்கும் அதிகமான வழக்குகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையிலேயே இருந்து வருகின்றன என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்து உள்ளார்.

அதேவேளையில், கடந்த 25 ஆண்டுகளாக 200,000க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அவர் கூறினார்.

அசாம் மாநிலத்தின் கௌஹாத்தி நகரில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், அசாமில் தேங்கிக் கிடக்கும் அத்தகைய வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்கும்படி கௌஹாத்தி உயர் நீதிமன்ற நீதிபதியை வலியுறுத்தினார்.

நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளை அந்தந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் விரைவில் முடிக்கவேண்டும் என்று வலியுறுத்திய தலைமை நீதிபதி, 90 லட்சத்துக்கும் மேலாக சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவற்றில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் இன்னும் அழைப்பாணைகூட அனுப்பப்படவில்லை என்றும் கூறினார்.