கொல்கத்தா: மேற்கு வங்கத்தைச் சேர்ந்த திபன் என்ற ஆண் திருநம்பி திஸ்டா என்ற பெண் திருநங்கையை மணந்துள்ளார். இந்தியாவில் இந்த வகை திருமணம் நடப்பது இதுவே முதல் முறை. 38 வயதான திஸ்டா அகர்பரா பகுதியைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். இவருக்கும் 40 வயதான திபனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதுகுறித்து தனது குடும்பத்தாரிடம் திபன் விவரம் தெரிவித்தபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் தனது விருப்பப்படியே திஸ்டாவைக் கரம் பிடித்துள்ளார் திபன். அண்மையில் இவர்களது திருமணம் சிறப்பாக நடந்தேறியது. தேசிய திருநங்கைகள் தினத்தன்று தனது திருமணம் குறித்து அறிவித்தார் திபன். அவரது குடும்பத்தார் திருமணத்தைப் புறக்கணித்தனர்.
மண வாழ்க்கையில் இணைந்த திருநங்கை ஜோடி
1 mins read

