செல்லப்பிராணி மீது கல் வீசியதால் முதியவரின் பேத்தி சுட்டுக்கொலை

செல்லப்பிராணி மீது கல் வீசியதால் முதியவரின் பேத்தி சுட்டுக்கொலை

1 mins read

பாட்னா: தங்கள் செல்லப்பிராணி மீது முதியவர் ஒருவர் கல் வீசியதால் கோபம் அடைந்த 6 பேர் கொண்ட குழு அவரது பேத்தியைச் சுட்டுக் கொன்றனர். பீகாரைச் சேர்ந்த தியாரே திவாரி என்ற அந்த முதியவர் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தனது மகன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டை நெருங்கியபோது மற்றொரு வீட்டிலிருந்த நாய் ஒன்று அவரைத் துரத்தி உள்ளது. நாயிடமிருந்து தப்பிக்க அதன் மீது கற்களை வீசியுள்ளார் திவாரி. இதுகுறித்து அறிந்த நாயின் உரிமையாளர் திவாரி குடும்பத்தாருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் அன்றிரவு 5 பேருடன் திவா ரியின் மகன் வீட்டிற்கு வந்த நாயின் உரிமையாளர் துப்பாக்கி யால் சுட்டுள்ளார். இதில் திவாரியின் 7 வயதான பேத்தியின் கழுத்தில் குண்டு பாய்ந்ததில் சிறுமி உயிரிழந்தாள்.