கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை

கூட்டணி ஆட்சியை விரும்பவில்லை

1 mins read

பெங்களூரு: தாம் முதல்வராக இருந்த 14 மாதங்களும் எம்எல்ஏக்களுக்காகவும் கூட்டணிக் கட்சிக்காகவும் அடிமையைப் போல் உழைத்ததாக அண்மையில் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகிய குமாரசாமி தெரிவித்துள்ளார்.

தாம் மாநில வளர்ச்சிக்காகத் திறமையாகப் பணியாற்றிய போதிலும் யாருமே தம்மைப் பாராட்டாதது மனதில் சற்றே வலியை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"ஆட்சி அமைந்த முதல் நாளில் இருந்தே காங்கிரஸ் தலைவர்கள் சிலர் பொதுவெளியில் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்," என்றார் குமாரசாமி.