உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்

உன்னாவ் பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடம்

1 mins read
de378ac4-942d-45a3-af57-f5c4b6a9a5f2
படம்: யுட்டியூப் -

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உன்னாவ் என்ற இடத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணின் உடல்நிலை மோசமான நிலையில் கவலைக்கிடமாக உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவருக்கு மருத்துவர் குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது.

உன்னாவ் பெண்ணுடன் விபத்தில் சிக்கிய அவரது வழக்கறிஞர் மகேந்திர சிங்கின் உடல்நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. மயக்க நிலையில் இருக்கும் அவருக்கு உயிர் காக்கும் கருவிகளின் உதவி வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக பா.ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கர் கைதானார். இந்த வழக்கு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்த பெண், அவரது குடும்பத்தினர், வழக்கறிஞர் மகேந்திரசிங் உள்ளிட்ட நால்வர் கடந்த வாரம் காரில் சென்றபோது வேகமாக வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணும் அவரது வழக்கறிஞரும் படுகாயம் அடைந்தனர்.

பெண்ணின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

லக்னோவில் உள்ள கேஜிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற மாதும் அவரது வழக்கறிஞரும் மேல் சிகிச்சைக்காக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்