லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தெருவோர கால்நடைகளை பராமரிக்க புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி உரிமையாளர்கள் இல்லாமல் தெருக்களில் சுற்றித்திரியும் கால்நடைகளை வளர்க்க முன்வருபவர்களுக்கு கால்நடை ஒன்றுக்கு நாள்தோறும் ரூ.30 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்த தொகை 3 மாதத்திற்கு ஒருமுறை அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இந்த திட்டத்திற்காக முதல் கட்டமாக ரூ.110 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெரு ஓரத்தில் திரிந்து பிடிபட்ட சுமார் 1 லட்சம் பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

