பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத் ரத்னா'

பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத் ரத்னா'

1 mins read
6f7c9f51-b50d-402a-aa45-51bd2c2fa780
-

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் அதிபர் பிரணாப் முகர்ஜிக்கு அந்நாட்டின் குடிமக்களுக்கான ஆக உயரிய விருதான (India's highest civilian award) 'பாரத் ரத்னா' விருது வழங்கப்படுகிறது. அதிபர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு அவ்விருதை இன்று வழங்கவிருக்கிறார்.

கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியாக இருந்த திரு முகர்ஜி, முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பிவி நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் ஆகியோரின் நிர்வாகங்களில் மூத்த பொறுப்புகளை வகித்திருந்தார்.

83 வயது முகர்ஜி, 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை இந்தியாவின் அதிபராகப் பணியாற்றினார். 2009ஆம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டு வரை அவர் இந்தியாவின் நிதியமைச்சராகவும் செயல்பட்டார்.

கட்சி பேதங்களைக் கடந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திரு முகர்ஜிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.