புதுடெல்லி: ஸ்ரீநகருக்குச் சென்ற காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் காஷ்மீரை சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத் நேற்று டெல்லிக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். அவருடன் சென்ற ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மிர்ரும் புதுடெல்லி திரும்பவேண்டியதாயிற்று.
குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகருக்குள் நுழைந்தால் பிரச்சினை ஏற்படும் என்பதால் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது.
ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடத்த அவர்கள் ஸ்ரீநகர் சென்றனர். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
காஷ்மீரை சேர்ந்தவருமான குலாம் நபி ஆசாத் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு முடிவை எதிர்த்து பேசினார்.

