உத்தரகாண்ட்: இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் கைபேசியைத் திருடியதாக இளையர் ஒருவரை மரத்தில் தலைகீழாக கட்டிவைத்து கிராமத்தினர் தாக்கிய காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்பகுதி கிராமம் ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த அந்த இளையரைக் கிராமத்தினர் சுற்றி வளைத்தபோது, அவரிடம் புதிய கைபேசி இருந்ததால், அதனை அவர் திருடியதாகக் கூறி மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி போலிசார் விரைந்து வந்து தாக்குதலுக்கு உள்ளான இளையரை மீட்டு விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் கொடுத்த புகாரின் பேரில் அவரைத் தாக்கிய மூவரைப் பிடித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.
கைபேசியை திருடியதாக கூறி இளையரை தலைகீழாக தொங்கவிட்டு அடித்த மக்கள்
1 mins read

