வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் -காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு

வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் -காஷ்மீர் காவல்துறை அறிவிப்பு

1 mins read
e92219b4-6067-44d4-a3e4-48ee2f938550
-

ஸ்ரீநகர்: காஷ்மீர் நிலவரம் தொடர்பாக பரவும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது. தற்போது அங்கு அமைதி நிலவுவதாகவும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை என்றும் காஷ்மீர் காவல்துறை அறிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து அங்கு மோதல் சம்பவங்கள் நடைபெறுவதாக பல்வேறு செய்திகள் பரவின. இந்நிலையில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நிகழவில்லை என்றும் சில இடங்களில் மட்டும் கட்டுப்பாடுகள் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் ஸ்ரீநகர் காவல்துறை டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை உள்நோக்கம் கொண்ட புனையப்பட்ட செய்திகள் என்பதால் மக்கள் அதை நம்பவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பக்ரித் கொண்டாடத் தயாராகி வருவதாகவும் பொருட்களை வாங்க கடைகளில் நல்ல கூட்டம் காணப்படுகிறது என்றும் எங்கும் பரபரப்பு நிலவுகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.