ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய மூன்று நிறுவனங்கள் ஆர்வம்

1 mins read

மும்பை: பொருளியல் பிரச்சினையால் முடங்கியுள்ள ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூன்று வெளிநாட்டு நிறுவனங்கள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனங்கள் பனாமா, அமெரிக்காவைச் சேர்ந்தவை எனக் கூறப்படுகிறது. முன்னதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் எனக் கருதப்பட்ட எத்திகாட், இந்துஜா நிறுவனங்கள் தற்போது அத்தகைய ஆர்வம் எதையும் வெளிப்படுத்தவில்லை. கடந்த சில மாதங்களாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முற்றிலும் முடங்கி உள்ளது.