வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டு

வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகளைக் காப்பாற்றிய காவலருக்குப் பாராட்டு

1 mins read
2da1118a-7f4a-4491-8d26-92dd3888242d
-

காந்தி நகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களைத் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மோர்பி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குழந்தைகளும் வெளிவர முடியாமல் தவித்த நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிரித்விராஜ் ஜடேஜா என்ற போலிஸ்காரர் இரண்டு குழந்தைகளையும் இரு தோள்களிலும் அமரவைத்து ஒன்றரைக் கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று காப்பாற்றினார். இவரைப் பிரபலங்கள், உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.