மஹாராஷ்டிராவின் மும்பை நகரிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தூரத்திலுள்ள பல்கார் பகுதியில் பேருந்து ஒன்று கால்வாய்க்குள் விழுந்தது. அந்தச் சம்பவத்தில் 49 மாணவர்கள் காயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் காலை 7 மணிக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகச் செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

