கடுமையான தொழில்நுட்பக் கோளாறால் விமானப் பயணம் ரத்து

கடுமையான தொழில்நுட்பக் கோளாறால் விமானப் பயணம் ரத்து

1 mins read
f4836d8f-efbc-45d2-9c1d-05b4a7815daf
(படம்: ராய்ட்டர்ஸ்) -

இண்டிகோ விமானப் பயணம் ஒன்று 'கடுமையான தொழில்நுட்பக் கோளாறு' காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாக்பூரிலிருந்து டெல்லிக்குப் புறப்படவேண்டிருந்த அந்த விமானம், தரையைவிட்டுப் பறக்கவேண்டிய சில நொடிகளுக்கு முன்னதாக அந்தக் கோளாறு குறித்து விமானியிடம் தெரிவிக்கப்பட்டது.

அந்த விமானி உடனே பயணத்தை நிறுத்தினார். பின்னர் விமானம் ஓடுபாதையைவிட்டு நடையோடுபாதைக்குத் திரும்பியது.

விமானப் பயணிகள் உடனே வெளியேற்றப்பட்டனர். அதே விமானத்தில் மத்திய அமைச்சர் நிதிக் கட்கரியும் பயணம் செய்திருந்ததாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.