ஒரே ஆட்டோவுக்குள் 24 பேர் ஏறி பயணம் செய்த ‘சாதனை’

சராசரியாக ஓர் ஆட்டோ ரிக்ஷாவுக்குள் வழக்கமாக மூன்று அல்லது நான்கு பேர் ஏறுவர். ஐந்து ஆறு பேர் என்றால் அந்த ஆட்டோ நகர ஆரம்பிக்கும்போதே அது சற்று ஆட்டம் காணத் தொடங்கிவிடும்.

அப்படி இருக்க, இந்தப் பரந்த உலகில் எதுவும் சாத்தியமே என நிரூபிக்கும் வகையில் 24 பேர் ஒரே ஆட்டோவுக்குள் ஏறி பயணம் செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவராக அந்த ஆட்டோவிலிருந்து வெளியேறும் காட்சி இணையவாசிகளைத் திகைக்க வைக்கிறது. எப்படி இத்தனை பேர் ஆட்டோவுக்குள் ஏறினர் என்பதே இணையவாசிகள் அனைவரின் கேள்வியாக உள்ளது.  

அந்த 24 பேரும் பெண்களும் குழந்தைகளுமாக உள்ளனர்.

இது உலக சாதனை என்றும் அதிசயம் என்றும் பலர் கேலியாக வர்ணித்து வருகின்றனர். ஆயினும், இது போன்ற சம்பவங்களால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் மிக அதிகம் என்பதே உண்மை.

2017ஆம் ஆண்டு தகவல்களின்படி, இந்தியாவில் 464, 910 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன. அவற்றில் மொத்தம் 147, 913 பேர் பலியாயினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்