நடுத்தெருவிலிருந்து உச்சாணிக் கொம்புக்கு உயர்ந்த இளையர்

டெல்லியில் வசிக்கும் புகைப்படக்கலைஞர் விக்கி ராய், ஃ*போர்ப்ஸ் (Forbes) சஞ்சிகையின் ‘30க்குக் கீழ் 30’ பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்.  அவர் சாதித்த கதையை ‘ஹியூமன்ஸ் அஃப் பாம்பே’ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

தனது 11ஆவது வயதில் வீட்டைவிட்டு ஓடிச்சென்ற ராய், டெல்லியில் புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். ஆனால் அந்நகரை அடைந்தபோது ஆரம்பத்தில் இருக்க இடமில்லாததால் வீதிகளில் படுக்கவேண்டியிருந்ததாக அவர் கூறினார்.

தட்டு கழுவும் வேலை பார்த்தும் அங்கு மற்றவர்கள் விட்டுவைத்த மிச்ச மீதி உணவைச் சாப்பிட்டு பசியைப் போக்கிக்கொண்டார் ராய்.

மருத்துவர் ஒருவர் அவர் மீது பரிதாபப்பட்டு ‘சலாம் பலக்’ என்ற அரசுசாரா அமைப்பில் அவரைச் சேர்த்தது முதல் ராயின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

புகைப்படக் கலைமீது ஆர்வம் காட்டி தன்னை மெருகேற்றிக்கொள்ள ராய் தொடர்ந்து முயன்றார். இறுதியில் பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் ஒருவர் ராயின் திறமையை அடையாளம் கண்டு அவருக்கு வாய்ப்பை வழங்கினார். ராயின் எதிர்காலம் பிரகாசித்தது.

“என் வருங்காலம் இந்த அளவுக்கு மாறும் என நான் கற்பனைகூட செய்ததில்லை,” என்கிறார் திரு ராய். அவரது முழுப் பதிவும் இங்கே:

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கல்கி  சாமியாருக்குச் சொந்தமான ஆசிரமங்கள்,  தொழில் நிறுவனங்கள் உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று  சோதனை நடத்தினர்.  படம்: ஊடகம்

17 Oct 2019

கல்கி சாமியாருக்கு சொந்தமான 40 இடங்களில் சோதனை

வைரக் கண்காட்சியில் 3,50,000 வைரங் கள் ஒட்டப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டி ருந்த மெர்சிடிஸ் பென்ஸ் கார். படம்: ஊடகம்

17 Oct 2019

3,50,000 வைரங்களுடன் கார்